கந்தன் வள்ளியை மணம்புரிந்து வாழ்ந்த இடம்.
கதிர்காமக்கோயிலிக்கு அருகில் வள்ளியம்மா
பிறந்த இடம் இருக்கிறது.
தேனும் தினை மாவும் படைப்பது வழக்கம்.
சர்வ சாதாரணமாக இங்கு தினை மாவு கிடைக்கிறது.

பயணம். ரத்னபுரி வழியாகச் செல்லலாம்.
கடலின் அழகை ரசித்தப் படி மாதர, ஹம்பன் தோட்ட,
திஸ்ஸா சென்றும் செல்லலாம்.
ரத்னபுரி வழியாகச் செல்லும்போது, வழியில்
உடவளவு சரணாலயம் பார்க்கலாம்.
காசு கொடுத்து ஜீப்பில் பார்க்க வருபவர்களைத்
தவிர்த்து மின் கம்பிகளுக்கு அப்பால்
அசால்டாக நின்று கொண்டிருக்கும்
யானையைப் பாருங்கள்.

உடவளவு நீர்த்தேக்கம் (UDAWALAVE)


இதோ கோயிலினுள் நுழையப் போகிறோம்.
கோயிலின் முகதுவாரம்.
வேலுண்டு வினையில்லை கந்தைய்யா!
கோயில் திறக்கபடுகிறது.
மற்றொரு கோணத்திலிருந்து கதிர்காமக் கோயில்.

இதோ கோயில்னுள்ளே உள்ளே நாம்.


ஸ்தல தீர்த்தமான மாணிக்க கங்கையில் மீன்கள்...

சுழித்து ஓடும் மாணிக்க கங்கை.
வேண்டுகோள்:

இதோ கோயில்னுள்ளே உள்ளே நாம்.
இல்லை. சில விவரங்களுக்காக......


ஸ்தல தீர்த்தமான மாணிக்க கங்கையில் மீன்கள்...

சுழித்து ஓடும் மாணிக்க கங்கை.
கதிர்காமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில்
இருக்கிறது செல்லக் கதிர்காமம்.
செல்லக் கதிர்காமத்தில் தான் விநாயகர் யானனயாய்
செல்லக் கதிர்காமத்தில் தான் விநாயகர் யானனயாய்
வந்து வள்ளியை பயமுருத்தி முருகன் வள்ளித்
திருமணம் செய்துகொள்ள உதவினார்.
மேலும் தகவல்களுக்கு.......
கதிர்காமம் பற்றிய பல அறியத் தகவல்களுக்கு
இங்கே பார்க்கவும். www.kataragama.org
கந்தன் என்ற பெயர் சொன்னால்
கடிதாக நோய்தீரும்.
கந்தா சரணம் கடம்பா சரணம்
சரவண பவ குகா சரணம் சரணம்,
குருகுகா சரணம்! குருபரா சரணம்.
சரணம் அடைந்திட்டேன்
ஸ்கந்தா போற்றி.
காத்திடுவாய் காத்திடுவாய் கந்தகுரு நாதா!
போற்றிடுவேன்! போற்றிடுவேன்
புவன குரு நாதா!
போற்றி போற்றி கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி.
வேண்டுகோள்:
இலங்கையைப் பற்றி எழுத வேண்டாம் என
திட்டி பின்னூட்டம் இட வேண்டாம்.
இது எனது 100ஆவது பதிவு.
அதனால் தான் கதிர்காமம்
குறித்து எழுதுகிறேன்.
இப்பதிவு என்னப்பன் கந்தனுக்கு சமர்ப்பணம்.



