![]() |
||||||||||||||||
| ||||||||||||||||
இஸ்லாமிய கதிர்காமம்
Original article in English: "Islamic Kataragama: The Timeless Shrine"
தமிழில் மொழிபெயர்ப்பு : சாந்திப்பிரியா
இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி நம்முடைய மூதோரான ''அலை ஆதாம்'' (alai), முதன் முதலாக 'செரெண்டிப்' (Serendip) எனப்படும் இலங்கைாவின் 'ஆதாம்' (Adam's Peak) மலையில்தான் வந்து இறங்கினார். தொன்று தொட்ட நம்பிக்கைகளின்படி சொர்க்க பூமியான விண்ணுலகிற்கு (Paradise) மிக அருகில் அமைந்து இருந்தது பூமியில் உள்ள ஆதாம் மலைப் பகுதிதான். ஆகவேதான் தெய்வீக நன்கொடையாக கருதப்படும் செரெண்டிப்பின் சூழ்நிலையை அப்படியே பெருமளவில் பாதுகாத்து வைத்துள்ளார்கள். இஸ்லாமிய கதிர்காமம் அதற்கு ஒரு நல்ல உதாரணம். இந்நாள் வரை இன்னமும் சுரண்டப்படாத பெரும் சொத்தை உள்ளடக்கி வைத்துள்ளதைப் போன்று அமைந்துள்ள அந்த புனித செரெண்டிப் மலைப் பகுதிக்கு, அதன் அருகில் உள்ள கடலைத் தாண்டி உலகெங்கும் இருந்து பெரும் அளவிலான முஸ்லிம் யாத்ரீகர்கள் வருகை தருகிறார்கள். இங்குள்ள மசூதியும், வண்ணக் கல்லறை ஆலயமும், புனிதக் குரான் காலத்துக்கு முந்தைய காலத்தை சேர்ந்த அல்லாவின் சேவகரும், புனிதக் குர்ஆனில் கூறப்பட்டுள்ள தீர்கதரிசியுமான 'மோசேஸ்' எனப்படும் 'மூஸா' (Musa or Moses) என்பவருடனும் இணைத்துப் பேசப்பட்டவருமான ''அலை ஹஸ்ரத் கிஜிர்'' {Hazarat Khizr (alai)} என்பவரின் வாழ்க்கையுடன் பெரிதளவு தொடர்ப்புக் கொண்டு உள்ளது. 'அலை ஹஸ்ரத் கிஜிர்' அவர்களே இந்த இடம் 'மயூல் ஹயத்' (Ma'ul Hayat) அல்லது '' நிரந்தரமான வாழ்வை'' (Water of Life) தரும் இடம் என்பதை கண்டறிந்தவர்.
சம காலத்தை சேர்ந்த M.C.A ஹசன் என்பவர் ஒருமுறைக் கூறினார்: அதை ஆமோதிப்பது போலவே இருந்தது 1870 ஆம் ஆண்டு அரசாங்கம் நியமித்து இருந்த 'ஹம்பன்டோடா' (Hambantota) எனும் கிராமத்தை சேர்ந்த திரு 'ஹட்சன்' (Hudson) என்பவருடைய அறிக்கையும் . அவர் தமது அறிக்கையில் கூறி இருந்தார்: செரெண்டிப்பில் இருந்த கிஜிர் பிராந்தியம் என்பது கதிர்காமனே ஆகும். லங்காவின் முஸ்லிம் மக்கள் அதை கிஜிர் - காமா (Khizr-gama) என்றும் அழைத்தார்கள். அவர்களில் பலரும் அங்கு வந்து 'ஹயாத் நபி' (Hayat Nabi) அதாவது இன்னமும் உயிருடன் உள்ள தீர்கதரிசியை சந்தித்துள்ளதாக கூறுகிறார்கள். கதிர்காமத்தில் உள்ள மயூல் ஹயத் (நிரந்தரமான வாழ்வை தரும்) எனப்படும் அந்த இடம் 'கிஜிர் மக்வாம்' (Khizr Maqaam) அல்லது 'அல் கிஜிர்' (al-Khizr) எனும் இஸ்லாமிய தொழிகை இடமாக உள்ளது. ஜிகிர் நினைவிடம்முதன் முதலாக அங்கிருந்த 'கிஜிர் அறை' எனப்பட்ட கரடுமுரடான மேல் கூறை வேய்ந்த குடிசையில் புனிதமான துறவிகளைப் போன்ற பகீர் எனப்பட்டவர்கள் தமது ஆன்மீக தாகத்தை தணித்துக் கொள்ள அங்கு வந்து தங்கி, பட்டினி விரதம் இருந்து தமது பிரார்த்தனைகளை தொடர விரும்பினார்கள். அப்படிப்பட்ட பழக்கம் இன்றும் தொடர்கின்றது. சில காலத்தில், ஒரு சில குறிப்பிட்ட இடங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரும் மேன்மைகளைத் தரும் என்று முஸ்லிம் சமுதாயத்தினர் நம்புகிறார்கள். உதாரணத்திற்கு ரம்ஜான் மாதங்களில் நோம்புகள் எனும் விரதங்கள் இருந்து, தானங்களை (zakat) செய்து , ஜிகிரை (zikr) தியானித்தபடியே இருப்பது அனைத்துக்கும் மேற்பட்ட ஆண்டவரான அல்லாவை மகிழ்ச்சியூட்டும் என்று நம்புகிறார்கள்.
இஸ்லாமிய மறை மெய் ஞானிகள் யாரை அப்படி பிரார்திக்க நினைக்கிறார்கள்? பலருக்கும் அருள் பாலித்த, பலரும் விரும்பிய அல் கிஜிர் (al-Khizr) என்பவர் யார்? செரின்டிப்பின் கடலைத் தாண்டி வந்துள்ள அந்த உலமாவுக்கும் கதிர்காமனுக்கும் என்ன தொடர்ப்பு? அழிவில்லாத வாழ்வைக் கொண்டவரும், ஆத்ம ஞானத்தைப் (min ladunni ilma) பெற்றவரும் , எங்கிருந்து வந்தவர் என்பதே தெரியாதவரும், ஐரோப்பியாவை சேர்ந்த துறவி செயின்ட் ஜார்ஜ்( St. George) மற்றும் தீர்கதரிசி எலிசா (Elijah) போன்றவர்களுடனும் இணைத்துப் பேசப்பட்டவருமான அல்லாவின் சேவகரே 'அல் கிஜிர்' என்பவர். கடலில் இரண்டு மாபெரும் சக்திகள் (majma'ul-bahrain) இணைந்தது போன்று இருந்த இந்த இடத்திற்கு, இறைவனின் கட்டளைப்படி வந்த தீர்கதரிசி மோசெஸ் (Prophet Moses) என்பவர், அல் கிஜிரிடம் வாழ்கையின் அற்புதமான இரகசியங்களை அறிந்து கொள்ள விரும்பினார். கண்களுக்கு முன்னால் ஓடிக்கொண்டு இருக்கும் நதிகளில் இரத்தினம் போன்ற நதியான 'மேனிக் கங்கா' (Menik Ganga) எனும் நதியும், அதன் இடது கரையில் கண்களுக்குப் புலனாகாமல் மறைந்துள்ள அல் கிஜிரின் அருள் மற்றும் ஞானம் என்ற இரண்டுமே, அங்கு ஒன்றாக இணைந்துள்ள மாபெரும் சக்திகள் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை ஆகும். தீர்கதரிசியான மோசெஸ்சினால் கூட வாழ்கையின் முரண்பாடான தத்துவ பாடங்களை, யாரென்றே தெரியாத கிஜிரிடம் இருந்து, மூன்று முறை பொறுமையாக முயன்று பார்த்தும் அவற்றை கற்றறிய முடியவில்லை என்பதினால், தனது முயற்சிகளில் தோல்வி அடைந்தவர் அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டார். 'ஹுசைன்' (Husain) என்பவற்றின் கூற்றின்படி அல் கிஜிர் என்பவர் பேரரசனான 'அலெக்ஜாண்டரின்' (Alexander) ராணுவ தளபதியாக இருந்தவர் என்றும், வேறு சில கதைகளில் அவர் அலெக்ஜாண்டரின் சமையல்காரராக இருந்தார் என்றும் கூறுகிறார்கள். எப்படி இருந்தாலும் இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னரே அல் கிஜிர் என்பவருக்கு அலெக்ஜாண்டருடன் இருந்த தொடர்ப்பைக் குறித்து மத்திய, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால் இன்றும் உண்மையான நம்பிக்கை உள்ள பக்தர்களுக்கு 'கிடிர் -காமத்தில்' (Khidr-gamam), அல் கிஜிருடன் ஏற்படும் அதிசய அனுபவங்கள் தொடர்வதாக கூறுகிறார்கள். செரெண்டிப் பகுதியில் கதிர்காமத்தில் உள்ள கிஜிரின் புனித நினைவுச் சின்னம் யுத்தக் கடவுளான 'ஸ்கந்தரின்' அல்லது தெய்வீக 'இஸ்கந்தர்' (Iskandar) ஆலயத்தில் இருந்து சுமார் முன்னூறு மீட்டர் தொலைவில்தான் உள்ளது. இஸ்கந்தர் மற்றும் கிஜிர் என்ற இருவருமே அழிவற்ற நிலையான வாழ்வைத் தரும் இந்த இடத்தை தேடி ஒன்றாகவே இங்கு வந்ததாகவும், இஸ்கந்தரினால் அலைந்தலைந்தும் கண்டு பிடிக்காமல் இருந்த இடத்தை அல் கிஜிர் எளிதாக கண்டு பிடித்துக் கொண்டார் என்றும் சில நம்பிக்கைகள் உள்ளன. 16 ஆம் நூற்றாண்டுவரை இஸ்லாமிய மறை மெய் ஞானிகள் பலரும் கதிர்காமனுக்கு வந்து கொண்டு இருந்தார்கள். ஆனால் அப்போது அங்கிருந்த போர்த்துகீசிய அரசினர் அங்கு தொடர்ந்து வந்து கொண்டு இருந்த மனித பட்டாளத்தினர், காலனி ஆதிக்கத்தை விரட்டுவதற்கு வருகிறார்கள் என்ற தவறான எண்ணத்தினால் யாத்ரிகள் அங்கு செல்வதற்கு போட்டார்கள். ஆனாலும் இன்றளவும் அதே சாலை வழியே பல இஸ்லாமிய மறை மெய் ஞானிகளின் வம்சாவழியினர் தமது பயணத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். துறவிகள்1845 ஆம் ஆண்டு தெய்வீக அழைப்பின் பேரில் 'சையத் ஜப்பார் அலி ஷா' (Seyed Jabbar Ali Shah) எனும் துறவி கதிர்காமனுக்கு வந்தார். தனிமையில் இருந்தவாறு , தியானங்களில் மூழ்கி இருந்தபடி, வலிய தானே ஏற்படுத்திக் கொண்ட பூரண பட்டினி விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டு பல காலம் உயிருடன் வாழ்ந்து வந்தார். அவருடைய புனிதக் கல்லறை இன்று அங்கு முக்கியமான இடமாக உள்ளது. அவரது புனித கல்லறை வளாகத்தை சுற்றி அறுபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் சமுதாய யாத்ரிகர்களின் கல்லறைகள் உள்ளன. ![]() ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதங்களில் கதிர்காமனில் நடைபெறும் பதினைந்து நாள் உற்சவம், இஸ்லாமிய மதத்தில் மேன்மை ஸ்தானத்தில் உள்ளதாகக் கருதிக் கொள்ளும் இஸ்லாமியர்களின் கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. அங்கு வருகை தரும் முஸ்லிம் சமுதாயத்தினர் தமது மதக் கோட்பாட்டினை கடுமையாக பின்பற்றிக் கொண்டிருந்தாலும், கதிர்காமனில் உள்ள மசூதி மற்றும் வண்ணக் கல்லறை ஆலயம் இரண்டிலுமே இறைவனின் நம்பிக்கையைக் கொண்ட எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, அவர்கள் அங்கு சென்று அமைதியாக வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். கதிர்காமனில் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவருடனும் வெளிப்படையாக விவாதங்கள் மூலம் , தமது ஆன்மீக எண்ணங்களை பிற மதத்தினருடன் பகிர்ந்து கொள்ள முடிகின்றது. இங்கே அனைத்து மதத்தை சார்ந்தவர்களுமே ஒரே நிலையில்தான் மதிக்கப்படுகிறார்கள்.
கதிர்காமனில் பெருமளவில் பக்தர்கள் வரக்கூடும் என்ற தொலைநோக்கு கண்ணோட்டத்தினால், 'கலேயை' (Galle) சேர்ந்த 'M.H.A. கப்பார்' (M.H.A. Gaffar) என்பவர் அங்கு உள்ள பழுதடைந்துள்ள கட்டிடங்களை சீர்படுத்தியும், அவற்றை விரிவுபடுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அல் ஹஜ் கப்பாரின் மேற்பார்வையில் பழைய மசூதி மீண்டும் புனரமைக்கப்பட்டு உள்ளது. அங்கு வந்து பிரார்த்தனைகளை செய்யும் பக்தர்கள் அங்குள்ள தலத்தின் புனிதத் தன்மைக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதினால் அவர்களது அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் இருக்குமாறு அந்த இடத்தை மாற்றி அமைத்து வருகிறார். வாழ்க்கையில் முன்னேறி விட்ட முஸ்லிம் சமுதாயத்தினரில் சிலர் புனித துறவிகளின் ஆலயங்களுக்கு வழக்கமாக சென்று வழிபடுவதை தட்டித் தவிர்த்து விடுகிறார்கள். புனித தீர்கதரிசியான 'ஸல் முஹம்மத் அதற்க்கு விலக்கல்ல. இறைவனிடம் பரிந்து அருளுரைக்கும் அல்லாவின் புனித சேவகர்களுடன் தொடர்ப்பு கொண்டு இருப்பது, நடைமுறையில் ஆச்சர்யப்படத்தக்க வகையில் பல நன்மைகளை தருகிறது என்பது மட்டும் அல்ல அவை ஞானத்தையும், மன அமைதியையும் தருகிறது. அந்த தொடர்ப்புக்களே வாழ்வின் இறுதி பயணத்தில் ஒருவருக்கு நிரந்தரமான சொத்தை அளிக்கும் காப்பீடு பத்திரம் போன்று உள்ளது.
1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதியன்று வெளியான 'தி சண்டே அப்சர்வர்' (கொலம்போ) {The Sunday Observer (Colombo)} எனும் நாளிதழில் இந்தக் கட்டுரை முதன் முதலாக வெளியாயிற்று. 1989 ஆம் ஆண்டு முதல், கதிர்காம ஆராய்ச்சி கட்டுரை வெளியீட்டு அமைப்பில் பீ. ஷஹாபுத்தின் ஆசிரியராக உள்ளார்.
|