இலங்கையின் காவல் தெய்வங்களான ஸ்கந்த முருகன் மற்றும் கதிர்காமன்

Kataragama Divya Rajottama
Kataragama shrine
கதிர்காமா ஆலயம்

எஸ். பத்மநாதன்

Original article in English: "The Guardian Deities of Lanka" by S. Padmanathan

1998 ஆம் ஆண்டு, டிஸம்பர் மாதம் 28-30 தேதிகளில் நடைபெற்ற அகில உலக ஸ்கந்த முருகனின் மகாநாட்டில் பேராசிரியர் திரு பத்மநாபன் ஆற்றிய இந்த உரை 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசியா பற்றிய ஆய்வுகள் செய்யும் பத்திரிகையில் வெளியானது.

உரையின் பொருள் அடக்கம்

  1. வரலாற்றுக் குறிப்பு
  2. கலாச்சார இணக்கம்
  3. இந்துக்களின் பண்டைக்கால பழக்கங்கள்
  4. புத்த மதத்தினரின் பண்டைக்கால பழக்கங்கள்
  5. குறிப்புக்கள், மேற்கோள்கள்

1. வரலாறு

இலங்கையில் உள்ள ஸ்கந்த முருகனின் ஆலயங்களில் மிகப் பழமையானதும் போற்றத்தக்கதுமான ஆலயம் கதிர்காமத்தில் உள்ள ஆலயமே. ஒரு கூற்றின்படி அது கிருஸ்துவர்கள் தோன்றிய காலத்துக்கு முற்பட்ட ஆலயம். 'தத்தகாமனி' என்ற மன்னன் தமிழ் மன்னன் 'இலாரா' என்பவன் மீது படை எடுத்து அனுராதபுராவின் ஆட்சியைக் கைபற்றிய பொழுது அந்தக் கடவுளே தனக்கு அருள் புரிந்ததாகக் கருதி பழமையான அந்த ஆலயத்தை மீண்டும் அழகான ஆலயமாக மாற்றிக் கட்டினான். இதற்கு சரித்திர பூர்வமாக எந்த விதமான ஆதாரங்களும் இல்லை . கதிர்காமத்தில் உள்ள ஸ்கந்த ஆலயம் பற்றிய செய்தி 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டு இருந்த 'சியாமி-பாலி' என்ற புத்த நூலான 'ஜினகலாமனி' (Jinakalamani) என்பதில் இருந்துக் கிடைத்தது . 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் புலவரான அருணகிரிநாதர் என்பவர் இயற்றிய பாடல்களில் கதிரகாமனில் உள்ள முருகனைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்று இருந்ததினால் 15 ஆம் நூற்றாண்டில் ஸ்கந்த முருகனின் ஆலயம் பக்தர்களுக்கு புனிதமான ஒரு யாத்திரை மையமாக இருந்து இருக்க வேண்டும் என்பது புரிகின்றது . 16 ஆம் நூற்றாண்டில் ஆயுதம் ஏந்திய வீரர்களால் கடுமையாகக் காவல் காக்கப்பட்டிருந்த அந்த ஆலயம் மிகுந்த செல்வச் செழிப்போடு இருந்து இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக அந்த ஆலயத்தை கொள்ளை அடிக்க வந்த போர்துகீஸிய படை வீரர்களில் ஒருவனான ரிபிரோ (Ribero) என்பவன் எழுதிய இந்தக் குறிப்பு தெரிவிக்கின்றது.

''காடிகாவோவில் (Kataragama) ஆயுதம் ஏந்திய ஐநூறு படை வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ள ஆலயத்திற்கு பல ஆண்டுகளாகவே பக்தர்கள் பெரும் அளவில் நன்கொடைகளும் காணிக்கைகளையும் செலுத்தி வந்திருக்க வேண்டும் என்பதின் அடையாளமாக விலை மதிக்க முடியாத அளவு தங்கம், வைரக் கற்கள் ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்த நகைகளும் இருந்தன. அந்த சொத்துக்களை நாமே எடுத்துக் கொண்டு விடலாம் என எண்ணி அது பற்றிய தகவல்களைத் தருமாறு பலரிடமும் நாங்கள் பல தடவை கேட்டோம். 1642 ஆம் ஆண்டில் இரண்டாயிரம் 'லாஸ்கரினிய' (Lascarins) படை வீரர்களுடனும், உள்ளுர் மக்களின் மொழி மற்றும் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்திருந்தவரும், அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான 'கஸ்பார் பிகூரியா டீ செர்ப்பே' என்ற தலைவரின் கீழ் (Gaspar Figueira de Cerpe), என்னையும் சேர்த்து 150 போர்த்துகீஸிய படை வீரர்கள் அந்தப் பொருட்களைக் கொள்ளை அடிக்கச் சென்றோம் . அந்த ஆலயம் இருந்த இடத்தின் அருகில் இருந்த ஒருவரிடம் அந்த ஆலயம் பற்றி விவரம் கேட்டோம். அவரும் தனக்கு அந்த ஆலயம் உள்ள இடம் தெரியும் என்று கூறி விட்டு எங்களுக்கு வழி காட்டிக் கொண்டு சென்றார் . பல மணி நேரம் காட்டுப் பகுதிகள் நிறைந்து இருந்த மலையை சுற்றி சுற்றி வந்தும் அந்த மலை மீதே இருந்த ஆலயத்தை எங்களால் காண முடியவில்லை . எங்களுடன் வழி காட்டிக் கொண்டு வந்த ஐந்து பேர்கள் ஒருவரை ஒருவர் அவர்களுக்குத் தெரியாதது போல காட்டிக் கொண்டும், முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டும், எதை எதையோ சம்மந்தம் இல்லாமல் கூறிக் கொண்டும் வழி நெடுக நடந்து வந்ததினால் வேண்டும் என்றே எங்களை திசைத் திருப்ப அப்படி நாடகம் ஆடுகின்றனர் என எண்ணி அவர்களில் மூவரைக் கொன்று விட்டோம். மிஞ்சி இருந்த இருவரும் அப்படியே நடக்கத் துவங்க வேறு வழி இன்றி 'காடிகோவில்' இருந்த அந்த ஆலயத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் நாங்கள் வந்த வழிலேயே திரும்ப வேண்டியதாயிற்று."3

அவர்களது செய்கைகளைக் கவனித்தபோது அந்த ஆலயத்தை உள்ளுரில் இருந்த மன்னனும், பக்தர்களும் மிகவும் பக்தி பூர்வத்துடன் பாதுகாத்து வந்துள்ளனர் எனத் தெரிந்தது. அதன் பக்கத்தில் உப்பேணி வைத்திருந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த வருமானத்தில் ஒரு பங்கினை அந்த ஆலயத்திற்கு காணிக்கையாகக் கொடுப்பது வழக்கம் என்பதைக் கவனித்திருந்த 'இராபரட் நாக்ஸ்' (Robert Knox) என்பவர் எழுதி உள்ள குறிப்பும் அந்தக் கருத்தை உறுதி செய்யும் அளவில் உள்ளது''. 'இராபரட் நாக்ஸ்' எழுதி இருந்தார்:

"பக்கத்தில் இருந்த நிலங்கள் மூலமோ, கடல்களில் கப்பல்கள் மூலமோ சென்று நெருங்க முடியாதபடி அமைந்து இருந்தது அந்த மலைப் பாங்கானப் பிரதேசம். கடவுள் அருளால் ஏற்பட்டிருந்த 'கடிக்கிராம்' என்ற அந்த மலைப் பாங்கான பிரதேசத்தில் உப்பளத்தை வைத்திருந்த எழைப் பணக்காரர் அனைவருமே தங்களுடைய வருமானத்தில் குறிப்பிட்ட அளவு வருமானத்தை அந்த ஆலயத்திற்கு காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் என்ற நியதி இருந்தது."4

  1. Vaedahiti Kanda or Katira Malai, principle peak of Kataragama's Seven Hills
  1. Ruhunu Maha Devale
  2. Ganapati Devale
  3. Perumal Kovil
  4. Teyvanai Amma Kovil
  1. Valli Amma Kovil
  2. Muttu Linga Swami Kovil
  3. Mosque and Shrine
  4. Kannaki Amma Kovil
  1. small kovil behind Suran Kottai
  2. Kiri Vehare (Suran Kottai)
  3. Basnayake Nilame's Welauwa
  4. Menik Ganga

Alatti Puja, Kataragama Maha Devaleகதிர்காமத்தில் இருந்த அந்த ஆலயத்தைப் பற்றிய செய்தி 19 ஆம் நூற்றாண்டில் 'சிலோன்' என்ற பகுதியைப் பற்றி 'டேவி' (Davy's) என்பவர் எழுதி உள்ள நூலில் இருந்து தெரிய வந்துள்ளது. ''அந்த ஆலயம் ஒரு பாழடைந்த இடத்தில், காட்டுப் பகுதிக்கு உள்ளே அனைவராலும் எளிதில் செல்ல முடியாத இடத்தில் இருந்ததாகவும், அந்த இடத்தின் அருகில் குறைவான எண்ணிக்கையில் இருந்தவர்களும் ஏழ்மை நிலையில் இருந்தவர்களாகவே இருந்தனர்' எனவும் எழுதி உள்ளார்.

ஸ்ரீலங்காவில் இருந்து மட்டும் அல்ல தொலை தூர இந்தியப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வணங்கிய புனித யாத்திரைப் பகுதியாக கதிர்காமன் இருந்ததாம். அந்த ஆலயத்தைத் தவிற வேறு சில கட்டிடங்களும் ஆலயத்தின் அருகில் இருந்தது. அவற்றைத் தவிற அங்கு கதிர்காம திவாலி (கூடம்) , கணேஷ் திவாலி மற்றும் புத்த விஹார் போன்றவைகளும் கவனிப்பார் அற்று இருக்க அவற்றைத் தவிர ஆறு சிறிய ஆலயங்களும் 'பட்னி' மற்றும் பிற ஐந்து தெய்வங்களுக்கு அற்பணிக்கப்பட்டு இருந்தன. அவற்றின் நடுப் பகுதியில் சிவன், பைரவர் போன்றவர்களுக்கு சன்னதிகள், பயணிகள் தங்கும் இடம், பிற அலுவலக அறைகள் போன்றவை இருந்தன.

'கதிர்காம திவாலே' என்பது இரண்டு பிரிவுகளாக இருந்தன. அவற்றில் வெளியில் இருந்த அறைதான் உள்ளே நுழைய முடியும் நிலையில் இருந்தது. அங்கிருந்த சுவர்களில் வரலாற்று சிறப்பு மிக்கக் காட்சிகள் மற்றும் தெய்வங்களின் சித்திரங்கள் காணப்பட்டன. அதன் மேல்கூரையின் மீது வண்ணம் பூசப்பட்ட விசித்திரமாக துணி காணப்பட்டது. கதிர்காமத்தின் முக்கியமான இடம் அங்குள்ள கல்யாண மடம் ஆகும். அது தரை மட்டத்தில் இருந்து உயரமான நிலையில் உள்ளபடி களிமண்ணினால் கட்டப்பட்டு, கால் இல்லாத ஒரு நாற்காலி போல, ஆனால் பின் புறத்தில் தடுப்பு உள்ள நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் இருக்கை புலித் தோல்களினால் மூடப்பட்டு, ஆலய உற்சவங்களில உபயோகிக்கப்படும் வாத்தியங்களை வைத்துள்ளது போல அமைக்கப்பட்டு உள்ளது. அதன் பக்கத்தில் எப்பொழுதும் எரிந்து கொண்டிந்த பெரிய ஹோம குண்டமும் உள்ளது. அங்கு வசிக்கும் பிராமணர்கள் அந்த கல்யாண மடம் கல்யாண நாதா என்பவருக்கு சொந்தமாக இருந்தது என்று கூறுகிறார்கள்.

அந்த ஆலயத்தை சுற்றி ஆலயத்திற்கு சொந்தமான பல கிராமங்கள் உண்டு. அந்த இடங்களில் வசித்தவர்கள் அந்த நிலங்களில் வேலை செய்பவர்கள். ஆலயத்தில் உள்ள பண்டிதர்கள், அரசாங்க அதிகாரிகளைத் தவிற பன்னிரண்டு 'கபூரலாக்கள்' என அழைக்கப்படுபவர்கள்' பஸ்னாயகா நிலாமே' என்ற அதிகாரியின் மேற் பார்வையில் இயங்குகின்றனர். 1815 ஆம் ஆண்டு முதல் பிரிடிஷ் அரசு அந்த நாட்டை தன் கட்டுக் கோப்புக்குள் எடுத்துக் கொண்ட பின் ஆலய யாத்திரையை மேற் கொண்ட பக்தர்கள் அங்கு செல்வது பெரும் அளவில் குறைந்து போயிற்று.

Pada Yatra 1999 at Panama
கதிர்காம பாத யாத்திரையில் பக்தர்கள்

வருடாந்திர யாத்திரை

19 ஆம் நூற்றாண்டு ஜூலை மாதம் பௌர்ணமி முதல் பதினைந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் வருட உற்சவங்களைத் தவிற ஆலயம் நடமாற்றம் அற்ற இடமாகவே காட்சி தருகின்றது. இரவில் யானை ஒன்றின் முதுகில் ஸ்வாமியை ஒரு பல்லக்கில் வைத்தபடி பதினாலு நாட்களும் 'பஸ்நாயகா நிலாமே' என்பவர் தலைமையில் தீப் பந்தம் ஏற்றியபடி ஊர்வலம் நடைபெறுகின்றது. விழாவின் கடைசி நாளில் 'பிராஹிரா' என்ற தண்ணீர் அறுக்கும் (Water Cutting) வைபவமும் நடக்கின்றது. சமீபத்து நிலவரப்படி கதிர்காமனின் திருவிழாவிற்கு மட்டுமே யாத்ரீகர்கள் செல்கின்றனர் எனத் தெரிகின்றது. மலேரியா மற்றும் பிற பரவும் வியாதிகளும் நிறைந்து உள்ள இடம் கதிர்காமம் என்பதினால் அங்கு நடக்கும் வருட விழாக்களின் மூலமும் வியாதிகள் பரவலாயிற்று. அது மட்டும் அல்ல மக்களின் குடி நீர் தேவைக்கு நம்பி இருக்கும் 'மேனிக் கங்காவும்' (Menik Ganga) வெய்யில் காலங்களில் வறண்டு விடுவதால் அங்கு வரும் மக்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளானார்கள். 19 ஆம் நூற்றாண்டின் கடைசி கட்டத்தில் அங்கு யாத்திரைக்கு வந்த பக்தர்களின் துயரைக் களைய அரசாங்கம் அந்த இடத்தில் தங்கும் இடம், பாதுகாப்புப் பணிக்கு காவலர்கள், சட்ட ஒழுங்கைப் கண்காணிக்க ஒரு நீதிபதி, மருத்துவ வசதி என பல வசதிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள் . அந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின் அங்கு வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கைப் பெருகலாயிற்று. 1871 ஆம் ஆண்டு அங்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 2000 ஆக இருந்தது. அதன் பின் 1872 வில் அங்கு வந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஆகவும், 1873 ல் 7000-8000 வரையிலும் அதிகரித்தது. இதற்குக் காரணம் சுகாதார மேம்பாடு, தொடர்ப்பு சாதன வசதிகள் மற்றும் தோட்டங்களில் பணி புரிய வந்த பெரும் எண்ணிக்கையிலான தமிழ் பேசும் மக்கள் என்ற மூன்று காரணங்கள் அங்கு வந்த யாத்ரீகர்களின் எண்ணிக்கைப் பெருகியது.

கதிர்காமாவில் வன்னிய லேடோ
கதிர்காமாவில் வன்னிய லேடோ

2. நற்பண்புகள் சங்கமித்த இடம்

2000 வருடங்களுக்கும் மேலாக ஒருங்கிணைந்து ஆனால் தனித் தன்மைகளுடன் வளர்ந்து வந்த இரு மதப் பிரிவினரையும் ஒருங்கிணைக்கும் இடமாக கதிர்காமன் அமைந்தது. அங்கு நடக்கும் அ]னத்து தெய்வ நம்பிக்கையின் அடிப்படையிலான நிகழ்ச்சிகளும் அனைவரினாலும் மிகவும் மதிக்கப்பட்டதினால் இந்துக்கள் மற்றும் புத்த மதத்தினர் இருவருமே அங்கு வரலாயினர். புராணக் கதைகளில் இடம் பெற்றுள்ள 'வேத்தாஸ்' (Veddahs) என்பவர்களுடன் கதிர்காமனுக்கு தொடர்ப்பு இருந்தது. 'வேத்தாஸ்' என்ற பிரிவினர் அந்த தீபகற்பத்தில் வாழ்ந்து கொண்டு அவர்களது இனப்ப பழக்கத்தின்படி கதிர்காமனையும் வணங்கி வந்தவர்கள். ஸ்கந்த முருகனின் ஆராதனைக்கு உகந்த இடமாக இந்துக்கள் கதிர்காமனில் இருந்த ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிடுவது உண்டு. அந்த தீவில், முக்கியமாக வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள ஆலயங்கள் வேத முறைகளை பின்பற்றி நடத்தப்படும் வழிபாட்டு முறைகளுக்கு மாறுபட்ட வழிபட்டு முறையைக் கொண்டு அமைந்திருந்தாலும் ஸ்கந்த முருகனின் ஆலயங்களும் கதிர்காமனுடன் தொடர்ப்புக் கொண்டே இருந்தது. முருகனின் இளைய மனைவியான 'வள்ளி' அந்த தீபகற்பத்தில் வாழ்ந்து வந்த 'வேத்தாஸ்' என்ற பிரிவினரில் இருந்து வந்தவர் எனவும் தீய சக்திகளுடன் இணைந்து இருந்த சூரபத்மனின் வதத்திற்குப் பிறகு 'வேத்தாஸ்' இனத்தினரின் வழிபாட்டுத் தலமாக கதிரகாமக் ஸ்கந்த முருகனின் ஆலயம் அமைந்தது. முருகன் மீதான பக்தி கொண்டு அலைந்து கொண்டிருந்த மலை வாழ் மக்களின் தொடர்பினால் கூட அந்த மாதிரியான கதைகள் தோன்றி இருக்கலாம்.

ஸ்ரீலங்காவின் புத்தமத வழிபாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பதினாறு புனித இடங்களில் ஒன்றாக கதிர்காமனின் ஆலயமும் உள்ளது. தங்களைப் பாதுகாக்கும் கடவுளாக கருதப்படும் நாதா, பட்டி மற்றும் விஷ்ணு போன்ற கடவுட்களுடன் கந்த குமரன் அல்லது கதிர்காமனும் சேர்க்கப்பட்டு ஸ்ரீலங்காவின் வணக்கத்துக்கு உரிய கடவுளாக ஏற்கப்பட்டு உள்ளார். அதனால்தான் கண்டியில் நடத்தப்படும் புத்தரின் புனிதப் பல்லை பவனியாக எடுத்துச் செல்லப்படும் புனிதத் திருவிழா ஊர்வலத்தில் இந்த நான்கு கடவுட்களும் இடம் பெற்றுள்ளனர். 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இவர் சிங்கள இனத்தவரிலும் பெரும் புகழ் பெற்றார். அதற்குக் காரணம் 13 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தெற்குப் பகுதியில் மீண்டும் தலை தூக்கிய முருக வழிபாடே ஆகும். சிங்கள புத்த மத வழிபாட்டில் ஸ்கந்தன் வழிபாடும் இணைக்கப்பட்டு இருந்ததின் காரணம் பல நூற்றாண்டுகளாக புத்த-இந்து மதங்கள் ஒன்றிணைந்து வளர்ந்ததே. கதிர்காமனின் புராண, இதிகாச வரலாற்றுச் செய்திகளையும் கதைகளையும் காணும் பொழுது சமூக நடை முறைகளில் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டு வளர்ந்து வந்த இந்து, சிங்கள, புத்த மற்றும் வேத்தாஸ் இனங்களின் வழிபாட்டு முறைகள் ஒன்றிணைந்து சங்கமித்துள்ளது போலத் தோன்றும். அந்த மூன்று ஆலய வழிபாட்டு முறைகளையும் கவனிக்கும் பொழுது இந்த எண்ணம் இன்னமும் வலுப்பெறுகின்றது.

கதிர்காம கடவுளின் ஊர்வலத்தில் கபூரலா பண்டிதர்கள்

கதிர்காமனின் மூன்று ஆலயங்களில் ஆகம முறை இல்லாத வழிபாடும் மற்றக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தனித் தன்மையுடன் உள்ளது மூல ஆலயம். அங்குள்ள கர்பக்கிரகத்திலோ எந்த விதமான சிலையும் இல்லாமல் அங்கு ஒரு திரைசீலையைப் போட்டு மூடி வைக்கப்பட்டு உள்ளது. வருடாந்திர விழாவில் யானையின் முதுகில் ஏற்றப்பட்ட ஒரு அலங்கார பேழையை ஊர்வலத்தில் எடுத்துச் செல்கிறார்கள். பரம்பரைப் பரம்பரை நடைமுறைப்படி அந்த பேழைக்கு 'கபூரலா' பிரிவினர்தான் பூஜைகளை செய்கிறார்கள். அவர்களை அந்தப் பழக்கத்தைக் கைவிடுமாறுக் கூற வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. யானையின் முதுகில் ஏற்றப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பேழையை ஊர்வலத்தில் எடுத்துச் செல்வதும் அந்த சடங்குகளை செய்ய 'கபூரலா' என்ற பிரிவினரை நியமிப்பதிலும் செய்யப்படும் சடங்குகள் சிங்கள புத்த மத வழிபாட்டு முறையான தேவாலியைத் தழுவியே உள்ளது போலவே தோன்றுவதால் இவற்றின் இடையே ஒரு ஒற்றுமை எந்த விதத்திலோ விதத்திலோ உள்ளது எனத் தெரிகின்றது. அது மட்டும் அல்ல அந்த ஆலயத்தின் அருகில் அமைக்கப்பட்டு உள்ள புத்த ஆலயமும் போதி மரமும் கதிர்காமத்திற்கும் புத்த மதத்திற்கும் பல நூற்றாண்டுகளின் இடைக் காலத்தில் இருந்து இந்நாள் வரை இருந்து வரும் தொடர்புக்களை மேலும் உறுதி செய்கின்றன.

3. இந்துக்களின் பண்டைய பழக்கங்கள்

ஸ்ரீலங்காவில் உள்ள இந்துக்களால் பெரிதும் வணங்கப்படும் கந்தனுக்கு அந்தத் தீவில் நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்த ஆலயங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பல ஆலயங்கள் மிகப் பழமையானவை என்றாலும் சில புது ஆலயங்களும் எழுப்பப்பட்டு உள்ளன. அந்த ஆலயங்களின் தோற்றமும் வரலாற்று செய்திகளும் கதிர்காமனுடன் அவற்றுக்கு இருந்த தொடர்பை எடுத்துக் காட்டுகின்றன. வடக்குப் பிராந்தியத்தில் மிகவும் முக்கியமானவையும், பண்டைய காலத்தை ஒட்டிய ஆலயமும் 'நல்லுர்', (Nallur), 'மவாட்டபுரம்' (Mavattapuram), மற்றும் 'ஜாப்னா' (Jaffna) பகுதியில் 'செல்வகனிதி'யிலும் (Cellvacanithi) உள்ளன. 'செல்வகனிதி'யில் உள்ள ஆலயத்தில் அகம முறையிலான வழிபாட்டு முறை இல்லை . 'நல்லுரில்' உள்ள 'கந்தஸ்வாமி ஆலயத்தில்' மூல கர்பக்கிரகத்தில் எந்தவிதமான விக்கிரமும் இன்றி முருகனைக் குறிக்கும் வகையில் வேல் மட்டுமே உள்ளது.

கிழக்குப் பகுதியில் உள்ள 'வெருக்கால்' (Verukal) , 'சித்தான்தி' (Cittanti) , மற்றும் 'திருக்கோவில்' (Thirukkovil) போன்ற இடங்களில் உள்ள ஆலயங்கள் மிகப் பழமையானவை . அங்கு 'வேத்தாஸ்' இனத்தவர் பெருமளவில் வந்து சைவ வழியை சார்ந்த தமிழர்களுடன் கலந்து கொண்டு வருடாந்திர விழாக்கள் சிறப்பாக நடக்க உதவினர். 'மட்டக்கிளப்பு'த் தேக்கத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் நடைமுறை பழக்கத்தில் இருந்த 'திருப்பட்டைக்கோவில்' (Tiruppattaikovil) பொது வழக்க முறைகளைக் கண்டால் அந்த ஆலயங்களுக்கும் கதிர்காமனுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பு தெரியவரும். அந்த தீபகற்பத்தின் கதிர்காமனுக்கு தீர்த யாத்திரை மேற் கொண்ட வியாபாரிகளான செட்டியார்களினால் கிழக்குப் பகுதியில் இருந்த ஆலயங்களில் நடத்தப்படும் வழிபாட்டு முறைகளைக் கண்டால் கதிர்காமனின் தோற்றமும் வளர்ச்சியும் புரியும். பல்வேறு ஆண்டுகளாக கதிர்காமனுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்டதின் விளைவாக ஒருமித்த முருக வழிபாட்டு முறைகள் வளரத் துவங்கின. 'தேக்காட்டுக் கோவில்கள்' என்று பெயரிடப்பட்ட முக்கியமான வழிபாட்டுத் தலங்களின் பட்டியலில் உள்ள தேசிய ஆலயங்களில் ஒன்றாக கதிர்காமனும் உள்ளது.

முருக வழிபாட்டு முறைகளை ஆராய்ந்தோம் எனில் ஸகந்த-முருகன் ஆலயங்களில் புகழ் மிக்கதும் புனிதமான ஆலயம் என்ற பெருமையையும் கதிர்காமன் பெறுகின்றது. மற்ற ஆலயங்கள் உள்ளுர்களில் மட்டுமே புகழ் பெற்றிருக்க கதிர்காமனோ தேசிய அளவில் முக்கியம் வாய்ந்த ஆலயம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 'கதிரேசன்', 'கதிர்காமன்', 'கதிரமலை' போன்ற பெயர்களை சுட்டிக் கொள்வதின் மூலம் ஸ்ரீலங்காவில் வாழ்ந்து வரும் சைவத் தமிழர்கள் கதிர்காமனுடன் தங்களுக்கு உள்ள உறவின் ஆழத்தை வெளிப் படுத்துகின்றனர்.

அருணகிரிநாதர்
அருணகிரிநாதர்

கதிர்காமனை பற்றிய பல பக்தித் தோத்திர நூல்களும் தலப் புராணப் புத்தகங்களும் தமிழில் உள்ளன. அவற்றில் பல புத்தகங்கள் முறையாக எழுதப்படவில்லை என்பதினால் கதிர்காமனை பற்றிய வரலாற்றுச் செய்திகளை முழுமையாகவும் சரியாகவும் புரிந்து கொள்ள முடியவில்லை . அவற்றில் மிகப் பழமையானதும், 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகவும் கூறப்படும் 'அருணகிரிநாதரின்' பாடல்கள் மூலமே சைவ தமிழர்கள் கதிர்காமனை நன்கு அறிந்து கொண்டிருந்தனர் என்பதையும் அது முருக வழிபாட்டுத் தலமாக இருந்தது என்ற உண்மை நிலையம் தெரிய வருகின்றது.

அருணகிரிநாதரின் 'திருப்புகழில்' கதிர்மானனைப் போற்றும் பதினாறு பாடல்கள் (செய்யுட்கள்) உள்ளன. 'கதிர்காம முதுர்' (Kathirkama Muttur) எனப்பட்ட கதிர்காமம் மிகப் பழமையானது. முருக வழிபாட்டுத் தலத்தின் யாத்திரையை மேற் கொண்ட பக்தர்கள் மற்ற இடங்களில் இருந்த ஆலயங்களுக்கு முதலில் சென்ற பின்னரே மிக முக்கியமான ஆலயம் என கருதப்பட்ட அந்த ஆலயத்திற்கும் சென்றனர்.

அருணகிரிநாதரின் திருப்புகழ் என்ற நூலில் முருகப் பெருமான் கதிர்காமனில் மலை உச்சியில் வசிப்பதாக எழுதப்பட்டு இருந்ததில் இருந்து 'கதிரமலை' என்ற அது புகழ் மிக்கத் தலமாக அவருடை காலத்தில் இருந்து இருக்கின்றது என்பது புரியும். திருப்புகழ் இயற்றப்பட்ட காலத்தின் பொழுது முருகன் வேடர் குலப் பெண்ணுடன் அந்த மலையில் இருந்ததாக நம்பப்பட்டது (verpil ariya veticci kalavikur cittira manikka vativane).

திருப்புகழில் முருகனை சிவனின் பிள்ளை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது (arakara civaya campu kuruparakumara). கதிர்காமக் கடவுளை அதில் 'குமாரப் பெருமான்', 'தேவர் பெருமான்', 'வீரப் பெருமான்', 'குரனாட்டப் பெருமாள்' எனவும் 'கதிர்காமப் பெருமாள்' என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள். பக்தி செய்வதற்கு மூலமும் முடிவுமாக விளங்குபவர் அவர் என அருணகிரிநாதர் கூறி உள்ளார். ஏழை எளியவர்க்கு (elaikku irankum perumal) இரக்கம் காட்டுபவரும் நீதியை நிலை நாட்டுபவரும் அவரே என்கின்றார் (nitip-perumal).

அவர் ஒரு வழிகாட்டி, குரு , நம் துயரை களைபவர் , நோய்களை தீர்த்து தீமைகளை அழிப்பவர், பக்தனுக்கு அளவில்லா மன இன்பம் தருபவர், நல் வாழ்விற்கு தேவையானவற்றைத் தருபவர், சிவனின் அவதாரம், உலக நாயகன், பிரபஞ்சத்தை காப்பவர், தேவையானவற்றைக் கொடுத்து இறுதியில் அழிவற்ற பேரானந்தத்தைத் தருபவர், ஜாதி பேதமின்றி அனைவருக்கும் பொதுவானவர் என்றெல்லாம் கதிர்காமனைப் பற்றி அருணகிரிநாதர் காலத்தில் வாழ்ந்த இந்து மத பக்தர்கள் போற்றி வணங்கினர். முருக பக்தி இயக்கம் அகம விதிகளை பின்பற்றி கடை பிடிக்கப்பட்ட வழிபாட்டு முறைகளை ஒதுக்கி விட்டு ஒரு மாற்று வழிபாட்டு முறை இயக்கமாக இன, மொழி பேதங்களைக் கடந்து உருவாகி வந்தது. அனைவரும் ஓன்றே என்பதைப் பறை சாற்றும் விதத்தில் இயற்கையான சூழ்நிலையில் அமைந்து இருந்த கதிர்காமனில் அ]னத்துப் பிரிவினரையும் சார்ந்த பக்தர்களும் வந்து ஒன்றிணைந்து பூஜித்தார்கள். அதனால்தான் கதிர்காமனைப் பற்றி எழுதிய அருணகிரிநாதர் அவரை ஏழை எளியவர்களிடம் அன்பு கொண்டு இரட்சிப்பவர், நீதியின் காவலர் எனவும் போற்றிக் கூறினார்.

'ஜாப்னா பட்டினம்' ( Jaffnapatnam) என்ற வன்னியில் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 'கதிரமலைப் பல்லு' (Katiraimalaip-pallu) என்ற நூல் கதிர்காம கடவுளைக் குறித்து எழுதப்பட்டதொன்று. கொத்தடிமைகளாக நிலங்களில் வேலை செய்து வந்த 'பள்ளர்களின்' வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் அமைந்துள்ள பாடல் அது. ஒரு கணவருடன் ஒன்றிணைந்து வாழும் இரு மனைவிகளின் சம்பாஷணையைப் போல அமைந்து உள்ளது அந்தப் பாடல். அதில் ஒருவள் இலங்கையை சேர்ந்தவள், மற்றவள் இந்திய நாட்டவள். இருவரும் தங்களுடைய தாய் நாட்டின் பெருமையைக் கூறும் விதத்தில் அமைந்து இருந்தது அதில் இருந்த பாடல்கள் . ஸ்ரீலங்காவைப் பற்றி எழுதப்பட்டுள்ள உள்ள பாடலில் எல்லா இடங்களை விட சிறப்பானதும் புனிதமுமான இடம் கதிர்காமம் எனவும் அதைத் தொடர்ந்து அமைந்துள்ளவை 'திருகேட்டீஸ்வரம்' (Tirukketisvaram) மற்றும் 'திருக்கோணம்' (Tirukonam) எனவும் கூறப்பட்டு உள்ளது. கதிர்காமத்தைப் பற்றிக் கூறுகையில் அதை 'கதிராபுரி' என்றும் 'கதிரை' (Katirai and Katirapuri) என்றும் கூறுகின்றது. 'கதிரை' என்றால் தென் பகுதியில் வாழும் வேலன் என்ற பொருளில் 'தென்கதிர் வேலன்' என எழுதப்பட்டு உள்ளது. 'கதிர்காமப் பாட்டு' என்ற நூலில் ஸ்கந்த முருகனைப் போன்றே அனைத்து சக்திகளையும் கொண்டவர் கதிர்காமன் என்றும் அவரை 'சங்கரியின் மகன்' எனவும், 'வள்ளியின் நாயகன்' எனவும்; மரங்கள் மீதும் பூங்காக்களிலும் வசிக்கும் தோகை விரித்தாடும் மயில் மீது அமர்ந்து உள்ளவர் எனவும் எழுதப்பட்டு உள்ளது. ''சிவபெருமானின்' மூன்றாம் கண்களில் இருந்து பறந்து சென்ற நெருப்புக் கணங்கள் 'சரவணப் பொய்கை' எனும் நதியில் விழ, அது ஆறு குழந்தைகளை பெற்றெடுக்க, அவை அனைத்தும் இணைந்து ஆறு முகங்களையும், பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஸ்கந்தனாக அவதாரம் பெற்றது. அவர் இந்த பூமியின் பதினான்கு பகுதிகளின் பாதுகாவலர் ஆனார். 'தக்கனை' அடக்கிய பலமிக்க 'விரபாகுவை' விட பலசாலியும் 1008 சூரிய கணங்களை சிறை பிடித்து வைத்திருந்தவனான 'சூரனை' வென்று அந்த கணங்களை விடுதலை செய்தார்''. இப்படியாக கந்த புராணத்தில் உள்ளவற்றையே வெளிக் காட்டும் விதத்தில் அமைந்து இருந்தது அந்த நூல் . கதிரை கடவுள் தன்னை நாடி வருபவர்களின் அனைத்து வேண்டுகொட்களையும் நிறைவேற்றியவர். இவற்றில் இருந்து தெரிய வருவது என்ன எனில் 16 ஆம் நூற்றாண்டில் கதிர்காமன் ஸ்கந்த முருகனின் அவதாரமாகவே கருதப்பட்டு அந்த ஆலயம் அந்த தீப கர்பத்தின் முக்கிய வழி பாட்டுத் தலமாகவும் விளங்கியது.

மத்திய நூற்றாண்டில் இருந்த ஸ்ரீலங்காவின் நூல்கள் , தென் இந்தியாவில் ஸ்கந்த முருகனின் புராணக் கதைகளை உள்ளடக்கி கந்த புராணத்தில் எழுதப்பட்டிருந்தவற்றை விட சிறிது மாறுபட்டே உள்ளன. ஸ்கந்த முருகனின் புராணக் கதைகளை உள்ளடக்கி இந்தத் தீபகர்பத்தில் எழுதப்பட்டுள்ள சமஸ்கிருத நூலான 'தஷ்ஷிண கைலாச மான்மியத்தில்' (Daksina-kailasa manmiyam) எழுதி உள்ளது என்ன எனில் '' குருன்சா மலையை இரண்டாகப் பிளந்து அசுரன் 'தாருகனை' தன் வேலால் குத்தி அழித்த பின் 'தேவகிரிக்கு' சென்ற 'முருகன்' அங்கிருந்துக் கிளம்பி 'திருச்சைநல்லுர்' (Tirucceynalur) மற்றும் பிற புனித இடங்களுக்கும் சென்றார். அதற்குப் பிறகு 'குரு' பகவான் மூலம் 'சூரன்' (Curan) மற்றும் அவன் சகோதரர்கள் செய்து வந்த அக்கிரமங்களைப் பற்றிக் கேட்டறிந்தவர் 'வீரவாகு தேவர்' தலைமையில் பெரும் படையுடனும் எண்ணற்ற பூத கணங்களுடனும் கதிர்காமனை அடைந்தார். 'எம கூடம்' என்ற இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஆலயத்தில் முருகன் தங்கி இருக்க அவருடன் சென்றவர்கள் அக்கம் பக்கத்தில் இருந்த இடங்களில் தங்கினார்கள். அங்கிருந்து 'மகேந்திரபுரி' என்ற இடத்தில் இருந்த 'சூரபத்மனிடம்' தூதராக 'வீரபாகு தேவர்' சென்றார் . அதன் பின் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே நடந்த போரில் கதிர்காமனில் தங்கி இருந்த முருகனும் அவர் படை வீரர்களும் அதையே தங்களுடைய படை வீடாக (Military Camp) மாற்றிக் கொண்டு யுத்தம் செய்தனர். சூரனை வெற்றி கொண்டதும் மீண்டும் அங்கு திரும்பிய முருகன் அதையே தன்னுடைய தங்கும் இடமாக மாற்றிக் கொண்டார்.

தென் இந்தியப் பகுதிகளில் இருந்த பண்டைய வழிபாட்டு வழக்கங்கள் மாறி விட்டன. கதிர்காமனின் வழிபாட்டு முறைகளின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் வழிபாட்டு முறை மாறத் துவங்கி உள்ளன. ஸ்கந்த-முருகனின் புனித ஆலயங்களின் பட்டியலில் கதிர்காமனையும் இணைத்துக் கொள்ளும் வகையில் படைவீடு என்ற வழிபாட்டுத்தலப் பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்ன எனில், தென் இந்தியாவின் புராணக் கதைகளில் இருந்து மாறுபட்டு ஸ்ரீலங்காவில் முருகன்-வள்ளித் திருமணம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்படும் இடம் இது ஆகும். கந்த புராணக் கதையின்படி முருகன்-வள்ளி; திருமணம் நடந்த இடம் 'தொண்டை மண்டலம்' என்ற பகுதியில் இருந்த 'வள்ளி மலை' ஆகும். பண்டைய தமிழ் வழிபாட்டு முறைகளில் இருந்து மெல்ல மாறுபட்டு விளங்கத் துவங்கிய வழிபாட்டு முறைகளுக்குக் காரணம் பல காலத்திற்குப் பிறகு உலக நாடுகளில் பல இனத்தவராலும் ஏற்கப்பட்டு பரவிய முருக பக்தியின் விளைவுகளே . ஸ்ரீலங்காவில் வேத்தாஸ், சிங்களவர், இந்துக்கள் இடையே ஏற்பட்ட இணக்கத்தைக் காணும் பொழுது தக்ஷிண மகாத்மியம் என்ற நூலில் உண்மையில் நிலவிய பழக்க வழக்கங்கள் பற்றிய செய்திகள் முறையாக குறிப்பிடப்பட்டு உள்ளது என நினைக்கத் தோன்றுகின்றது.

Ven Dr. Aluthwewa Soratha Thero leads <I>pirith</> chanting before the Maha Perahera
மகா பெரஹிரா யாத்திரையில் மந்திரம் ஓதியபடி ஊர்வலத்தை நடத்திச் செல்லும் கிரிவேஹரா வென். டர். சொரத தேரோமகா பெரஹிரா யாத்திரையில் மந்திரம் ஓதியபடி ஊர்வலத்தை நடத்திச் செல்லும் கிரிவேஹரா வென். டர். சொரத தேரோ

4. புத்த ஐதீகம்

புத்தர்களின் வழிபாட்டில் கதர்காமன் அவர்களுடைய பதினாறு வழிபாட்டுத் தளங்களில் ஒன்று என்று கூறுகிறார்கள். இங்குதான் மிகவும் பழமையான மடாலயம் அமைக்கப்பட்டது. கிருஸ்துவர்கள் வந்த காலத்துக்கு முன்பாகவே இந்த இடமே அரசாள்பவர்களின் முக்கிய நிலப்பகுதியாக அமைந்து இருந்தது. 'சங்கமித்ரா' என்ற அரசன் 'போதி' மரத்தை இங்கு கொண்டு வந்தபோது அவரை வரவேற்பதில் 'தேவனாம்பியாய டிஸ்சா' என்பவருடன் கதிர்காமத்தை சேர்ந்த ஷத்ரியர்களும் ஒன்றிணைந்தார்கள் என்று மகாவம்ச நூல் தெரிவிக்கின்றது. இது குறித்து மகாவம்சத்தில் இப்படியாக எழுதப்பட்டு உள்ளது:

"மஹிந்திரா மற்றும் 'பிக்குணி சங்கமித்ரா' மற்றும் பிற மன்னர்கள் தத்தம் மக்களுடன் இந்த இடத்தை நோக்கி வந்தார்கள். 'கஜாரகாமா' மற்றும் 'கண்டனகாமா' போன்ற பெருங்குடி மக்களும் 'பிரம்மன் திவாகா' மற்றும் அவருடைய மக்களும் இங்கு வாயு பகவானின் உதவியுடன் வந்தார்கள். அவர்கள் அனைவரும் புனித போதி மர வைபவத்திற்கு இங்கு வந்தார்கள்."

'மகாதேவலே' எனும் இடத்தின் வடக்குப் பக்கத்தில் இருந்த 'காதித்ரலி வேஹிரா' எனும் பண்டைய கால இடத்தை அமைத்தவர் தத்த காமினி எனும் மன்னனே என்று நம்புகிறார்கள். புத்தர் தமது ஸ்ரீ லாங்காவின் விஜயத்தின்போது கதிர்காமா என்ற இந்த இடத்துக்கு வந்ததினால் மூன்றாம் நூற்றாண்டில் 'தேவனாம்பியாய டிஸ்சா' இங்கு போதி மரத்தை எடுத்து வந்து நட்டார் என்று நம்புகிறார்கள். மகாவம்சாவின் செய்தியின்படி 'அகபோதி' என்ற மன்னன் கதிர்காமாவில் ஒரு புத்த விஹாராவை அமைத்தது மட்டும் இல்லாமல் தம்மசாலாவில் இன்னொரு விஹாராவை சீரமைத்தார் என்றும் தெரிவிக்கின்றது. அதற்காக அந்த மன்னன் 'மண்டகாமா' என்ற கிராமத்தை தானமாகத் தந்தார் என்றும் கூறுகின்றது. பதினோராம் நூற்றாண்டில் இந்த இடங்கள் சோழ மன்னர்களின் வசத்தில் வீழ்ந்தவுடன் இலங்கைாவின் மூன்று பகுதிகளில் ஒரு பகுதியான 'ரோஹண்ணா' என்ற இடமும் கதிர்காமனுடன் சேர்ந்து சோழர்கள் வசம் விழுந்தது . அது குறித்து குல வம்சா எனும் நூலில் கூறப்பட்டு' உள்ளது என்ன என்றால் ''சோழர்களின் அட்டகாசத்தை அடைக்கியவனும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், மாபெரும் வீரனுமான மன்னன் 'லோஆகா' என்பவர் 'ரோஹண்ணாவை 'மீட்டு கதிர்காமனில் தங்கி இருந்தார். அதற்குப் பிறகு அந்த இடம் 'காசப்பா' என்ற தளபதியின் வசம் வீழ்ந்தது. அதற்குப் பிறகு மீண்டும் 'விஜயபாஹு' எனும் 'கீட்டி' என்ற மன்னனிடம் அந்த இடம் வீழ்ந்தது. ஸ்கந்த முருகனே கதிர்காமத்தைக் காக்கும் நான்கு கடவுட்களில் ஒரு கடவுள் எனக் கருதப்பட்டு அவர் 'கதர்காம திவாலே' எனும் புத்த மடாலயத்தில் வணங்கப்பட்டார் . பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்த அதற்கான சரித்திர ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதின் காரணம் அப்போது அமைக்கப்பட்டு இருந்த திவாலே என்றக் கட்டிடம் நல்ல நிலையில் கட்டப்பட்டது அல்ல என்பதே.

Kataragama Deviyo

இந்துக்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே நிலவிய இணக்கத்தினால் புத்தர் ஆலயங்களின் இருந்த திவாலியில் காக்கும் கடவுட்களான நான்கில் ஒன்றாக ஸ்கந்த முருகனும் இடம் பெற்று இருந்துள்ளார். 'பிராமணி கல்வெட்டு' 28 ட்டில் காணப்படும் செய்திகளின்படி கிருஸ்துவர்கள் இந்த தீபகற்பத்துக்கு வருவதற்கு முன்னரே முருகன் அங்கு அறியப்பட்டு இருந்துள்ளார். 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த 'போலன்னரூவா' அரசாட்சியினர் மீது ஸ்கந்த முருகனின் ஆதிக்கம் பெருமளவில் இருந்துள்ளது. இந்தக் கல்வெட்டுச் செய்தியின்படி 'கஜபாஹு II ' என்பவர் 'ஹினாபி'எனும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பூஜைக்கென்றே தயாரித்த விசேஷமான ஸ்கந்தனின் சிலைக்கு லக்ஷார்ச்சனை செய்துள்ளார். 14 ஆம் நூற்றாண்டு முதல் ஸ்கந்தனை இங்குள்ளவர்கள் காக்கும் கடவுளாகவே வழிபாட்டு வந்துள்ளார்கள் என்பது கல்வெட்டுக்கள் மூலம் தெரிகின்றது. 'உபுல்வன்', 'சமன்', 'விபிஷணா' மற்றும் 'கன்டகுமரா' (Upulvan, Saman, Vibhisana and Kantakumara) என்ற நான்கு தெய்வங்களே காக்கும் கடவுளாக கருதப்பட்டு வந்தன. 14 ஆம் நூற்றாண்டு மத்தியில் 'லங்கலிடகா' மற்றும் 'கடலடினியா' (Lankatilaka and Gadaladeniya) போன்ற புத்த ஆலயங்களின் கட்டுமானம் இந்து ஆலய கருத்துக்களோடு அமைந்து உள்ளது. மேல் கூறிய ஆலயங்களில் காக்கும் கடவுட்களுக்கு தனித் தனி சன்னதிகள் இருந்து அவர்கள் வழிபடப்பட்டு வந்துள்ளார்கள். 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிறைய ஸ்கந்த முருகன் ஆலயங்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்பது தெரிகின்றது.

'கண்டியான்' அரச ஆட்சியில் ஸ்கந்தனை 'கடரகமா தேவியோ' (Kataragama Deviyo) என அழைத்து பூஜித்ததைப் போலவே 'தேவினுவாரா' எனும் சமயமுறையும் இன்னொரு காக்கும் கடவுளாக கருதப்பட்ட 'உபுல்வன்' வழிபாட்டில் இருந்தது. புத்தர்களின் கருத்தின்படி 'கடர்காமத்தில்' உள்ள கந்த குமரா என்பவர் நான்கு காக்கும் கடவுட்களில் ஒருவர். ஆனால் அவரையே இந்துக்கள் எங்கும் நிறைந்துள்ள, நமது அறிவெல்லைக்கு அப்பால் உள்ள ஸ்கந்த முருகன் என போற்றி வணங்குகிறார்கள்.


தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

பேராசிரியர் திரு எஸ். பத்மநாதன்: 1969 ஆம் ஆண்டில் ''லண்டன் ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்'' என்ற கல்வி நிலையத்தில் இருந்து 'தென் ஆப்ரிக்கா சமுதாய வரலாற்று' ஆய்வில் Ph.D. பட்டம் பெற்றார். 1994 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்காவின் (இலங்கை) "யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷனின்'' துணைத் தலைவர் பதவியில் உள்ளார். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற "உலக ஹிந்துக்கள் மகானாட்டின் " பொதுச் செயலாளராக" இருந்துள்ளார்.

See also Heinz Bechert's article
"Skandakumara and Kataragama: An Aspect of the Relation of Hinduism and Buddhism in Sri Lanka"
Other articles from the First International Conference on Skanda-Murukan