| |||||||||
கதிர்காமனின் இரண்டு மனைவிகள்
by Prof. Paul Younger
|
![]() |
வள்ளி-தெய்வானையுடன்
முருகன்
எனும் கதிர்காமன் |
![]() |
அலாட்டி அம்மாக்கள் எனப்படுபவர்கள் தினமும் இருவேளை
- காலை மற்றும் மாலையில்- அலாட்டிபூஜை எனும்
சடங்கை செய்கிறார்கள்.
|
இந்த கதிர்காம பண்டிகையின் முக்கிய அம்சம் அலாட்டி அம்மாக்களின் பங்குதான். அவர்கள் வள்ளியின் இனத்தை சேர்ந்தவர்கள். வள்ளி கதிர்காமனை காதலித்தபோது அவளுக்கு துணையாக இருந்தவர்கள் அந்த சமூகத்தினர். ஆகவே அவர்கள் தமது கைகளில் எரிந்து கொண்டு இருக்கும் விளக்குகளை ஏந்திக் கொண்டு கொண்டு ஊர்வலத்தில் செல்வார்கள். பண்டைய காலத்து உறவுகள் மடிவது இல்லை என்பதைக் காட்டும் உணர்வோடு உணர்ச்சிகளுக்கு இடம் தராத வகையில் சிங்கள மக்களும் அதில் பங்கேற்று வந்தார்கள்.
அலாட்டி அம்மாக்கள் தமது கைகளில் எரிந்து கொண்டு இருக்கும் விளக்குகளை வைத்துக் கொண்டு ஊர்வலத்தில் செல்வது அவர்கள் தமது வம்சத்தை சார்ந்தவளுக்கு தாங்கள் அனைவரும் துணையாக இருக்கின்றோம் என்பதை பறைசாற்றத்தான். 1989 ஆம் ஆண்டில் இந்த ஊர்வலத்தின்போது வெடிகுண்டுகள் வீசப்பட்டு ஐந்து அலாட்டி அம்மாக்கள் உயிர் இழந்தார்கள். ஆனாலும் அவர்கள் வம்சாவளியினர் அதை பொருட்படுத்தாமல் அடுத்த பண்டிகைகளின்போது தம்மை மேலும் அதிக அளவில் அந்த திருவிழாவில் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
ஆனால் இன்னொரு மனைவியின் கதி என்ன? சம்பிரதாய முறையில் ஆச்சார பிரிவு இந்துக்களினால் கட்டப்பட்டு உள்ளது கிழக்கு நோக்கிப் பார்த்தபடி உள்ள தெய்வானையின் ஆலயம். இச்சா சக்தியை (வள்ளி) தேடிச் செல்லும் கதிர்காமருக்கு தன்னுடைய வருத்ததை தெரிவிப்பது போல இருக்கும் வகையில் அவருக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்துள்ள நிலையில் கிரியா சக்தியான தெய்வானையின் ஆலயம் அமைந்து உள்ளது. தெய்வானையின் ஆலயத்து சடங்குகள் அனைத்தும் பெரிய அளவில் வடப்பகுதியை சேர்ந்த ஆச்சாரம் மிக்க பண்டிதர்களினால் செய்யப்படுகின்றது.
1990 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள் வருத்தம் தருபவை ஆகும். ராணுவ நடவடிக்கைகளினால் அங்கிருந்த மக்களினால் கதிர்காம பண்டிகைகளை சரிவர நடத்த முடியவில்லை. அது போலவே தெய்வானையின் ஆலயத்து சடங்குகளையும் முறையாக செய்ய முடியாமல் போயிற்று. ஆனாலும் அந்த காலத்தில் துவங்கிய காவடி ஆட்டமும், தீ மிதிக்கும் விழாக்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
கதிர்காம ஐதீகத்தில் இரண்டு மனைவிகளுமே முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள். கதிர்காமனுக்கு வள்ளி மீதுதான் அதிக ஆசை என்பதிலும் எந்த ஐயமும் கிடையாது. தென் இந்தியப் பகுதிகளில் இருந்து வந்துள்ளவர்களும் (தெய்வானையின் மீது அதிக பக்தி கொண்டவர்கள் - சாந்திப்பிரியா) இங்குள்ள நடைமுறை பழக்கங்களை ஏற்றுக் கொண்டு அந்த திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த நாட்டில் நடைபெறும் தீவீரவாதத்தினால் அதிக பிரச்சனைகளை தமிழ் மக்களே சந்திக்கின்றார்கள் என்றாலும், மெல்ல மெல்ல அவர்கள் பண்டைய பண்பாட்டைக் கை விடாமல் திருவிழாக்களை நடத்துவார்கள் என்று நம்பலாம்.
கதிர்காமனின் ஊர்வலம் வள்ளியின் ஆலயத்தை அடைந்ததும், கதிர்காமத்தில் வள்ளி ஆலயத்தின் அருகில் உள்ள மசூதியில் இருந்து நிறைய முஸ்லிம் மத மக்கள் வெளிவந்து ஊர்வலத்தினரை உற்சாகப்படுத்துகிறார்கள்.
கதிர்காமப் புராணங்களில் இந்து - முஸ்லிம் பிணைப்புக்களை பற்றிய எந்த செய்தியும் இல்லை என்றாலும், முஸ்லிம் சமுதாயத்தினர் சகோதர பாவத்துடன் இந்துக்களுடன் இங்கு உறவு கொண்டுள்ளனர் என்பது வள்ளி ஆலயத்தின் பக்கத்தில் அமைக்கப்பட்டு உள்ள மசூதியின் மூலம் தெரிய வரும். அந்த மசூதி அங்கு ஏன் அமைக்கப்பட்டது என்பதற்கான வரலாறும் இல்லை. இங்குள்ள இன்னொரு விசித்திரமான செய்தி என்ன என்றால் தமிழ் பேசும் முஸ்லிம் மத சகோதரர்களின் வீடுகளில் அவர்களுக்கு இரண்டாம் மனைவிகளுடன் ஏற்படும் சிக்கல்களை சமாதானமாகப் பேசி தீர்த்துக் கொள்ள இங்குள்ள வள்ளியின் பக்தர்கள் பெருமளவில் உதவுகிறார்கள்.
ஒரு சின்ன சம்பவம் நினைவு கூறத்தக்கது. ஒருமுறை நாங்கள் பயணம் செய்து கொண்டு இருந்த பஸ்ஸில் இரண்டு வயதான மூதாட்டிகள் ஏறிக் கொண்டார்கள். அப்போது சிறு தகராறு ஏற்பட்டது. வயதான தமக்கு அமர்ந்து கொள்ள எந்த இளைஞ்சராவது எழுந்து உதவுவார்களா என எதிர்பார்த்த வயதான மூதாட்டிகளுக்கு ஆறுதலாக ஒரு முஸ்லிம் மதத்தை சார்ந்தவர் எழுந்து தமது இருக்கையை தந்ததும் அல்லாமல், மற்றவர்களையும் சற்று தள்ளித் தள்ளி அமர்ந்து கொள்ளச் சொல்லி இரண்டு மூதாட்டிகளும் அமர்ந்து கொண்டு பயணம் செய்ய உதவினார். ஆனால் அவரோ உட்கார்ந்து கொள்ள இடம் இல்லாததினால் நின்று கொண்டே பயணம் செய்தார்.
இந்த சம்பவம் இரு சமூகத்தினருக்கு இடையே அங்கு நிலவிய நல்லெண்ணத்தினை பிரதிபலிப்பதாக அமைந்து இருந்தது.
ஆயிரம் வருடங்களாக ஸ்ரீ லங்காவில் நிலவிய சமூக மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக உள்ள கதிகாமப் பண்டிகையை ஒவ்வொரு தலைமுறையினரும் மாறுபட்ட கோணத்தில் பார்க்கின்றார்கள். கதிர்காமரின் இரண்டு மனைவிகளும் அங்கு தனித் தனியே இருந்தாலும் இருவரும் நல்லெண்ணத்துடன் ஒற்றுமையாகவே (வள்ளி - தேவானையின் இரு பிரிவினர்களிடையே ஏற்படும் ஒற்றுமையை குறித்து கூறப்பட்டு உள்ளது - சாந்திப்பிரியா) இருக்கின்றார்கள்.
முஸ்லிம் சமுதாய சகோதரர்களும் தமது பங்கை பெருமளவு தருகிறார்கள். ஆகவே இந்தப் பண்டிகை மூலமாவது மகுடம் போல விளங்கும் இந்த தீபகற்பத்தில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்பதை நம் விருப்பம்.